மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

2 mins read
d2665e28-2136-456b-919a-94cb7f1fc419
பயணிகள் எதிர்பார்க்கவிருக்கும் உணவு வகைகள். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 3

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பிரீமியம் இக்கானமி விமானப் பயணச்சீட்டுப் பிரிவில் பயணம் செய்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. வகை வகையான உணவு, பானத் தெரிவுகள், ‘ஷாம்பூ’, சவர்க்காரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்ட பயணப் பை போன்றவை அவற்றில் அடங்கும்.

விமானம் புறப்படும் சிறிது நேரத்தில் பயணிகளுக்குச் சிறிய கிளாஸ் ‘ஷாம்பெய்ன்’ ஒன்று வழங்கப்படும். உணவுப் பட்டியலிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் உணவு தனிப் பயன்பாட்டிற்கு உள்ள பீங்கான் பாத்திரங்களில் பரிமாறப்படும். இந்த மாற்றங்கள் இம்மாத இறுதியில் நடப்புக்கு வரும்.

உணவுத் தெரிவுகள்

பிரீமியம் இக்கானமி பிரிவில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியின் உணவிலும் கூடுதலாக ‘ஏப்பிடைசர்’ம், இனிப்புப் பொருளும் இருக்கும். மேம்படுத்தப்பட்ட ரொட்டி வகைகளும் உள்ளன.

பயணிகள் அனைத்துலக அல்லது ஆசிய உணவு வகையைத் தேர்வு செய்யலாம். விமானம் புறப்படுவதற்கு 24 மணிநேரம் முன்னர் பயணிகள் “புக் தி குக்” உணவு பட்டியலிலிருந்து தங்களுக்குப் பிடித்தமான உணவு வகையைத் தேர்ந்தெடுக்கலாம்.

அத்தியாவசியப் பொருள்களைக் கொண்ட பயணப் பை

பயணிகளுக்கான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்ட புதிய பயணப் பை தயார் செய்யப்பட்டுள்ளது. கழிவறைக்கு அணிந்து செல்வதற்கான செருப்பும் அதில் இருக்கும்.

சலுகைகள்

பிரீமியம் இக்கானமி பிரிவில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் குறிப்பிட்ட முகப்பில் சுய சேவை இயந்திரம் மூலம் பயணத்திற்கு ஆயத்தமாகலாம். விமானத்தில் ஏற முன்னுரிமையும் வழங்கப்படும்.

பயணத்தின்போது படம் பார்க்கும் பயணிகளுக்குச் சுற்றுவட்டாரத்தில் உள்ள சத்தத்தை நீக்கும் தலையணி கேட்பொறி வழங்கப்படும். தேர்வு செய்து பார்க்க 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்