சீனா செல்கிறார் துணைப் பிரதமர் ஹெங்

சீனா செல்கிறார் துணைப் பிரதமர் ஹெங்

1 mins read
1bed454c-3525-4a8e-8ceb-e8a6b4909a74
துணைப் பிரதமர் ஹெங் சுவி கியட். - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஹெங், பெய்ஜிங், ‌ஷென்சன், ஹாங்காங் ஆகியவற்றுக்குச் செல்வார். அவர், தமது ஆறு நாள் அதிகாரத்துவப் பயணத்தின்போது பல சீனத் தலைவர்களைச் சந்திப்பார் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே பல உயரிய சந்திப்புகள் இடம்பெற்று வந்துள்ளன; அந்த வகையில் திரு ஹெங்கின் பயணமும் இடம்பெறுவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்