கோ.சாரங்கபாணியின் பிறந்தநாள்

இன்று தமிழ்முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பிறந்தநாள்.

இன்றுவரையில் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்திருக்கும் தானைத் தலைவர்.

தமிழ் முரசு, தமிழர் பேரவை (அன்றைய தமிழர் பிரதிநிதித்துவ சபை), தமிழர் திருநாள், தமிழ் கல்விக் கழகம், எழுத்தாளர் பேரவை என்று பல வழிகளிலும் முயன்று, முன்னின்று செயல்பட்டு சிங்கப்பூரில் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் உயர்ந்து, உச்சம் பெற உருக்கொடுத்தவர்.

இலக்குகளோடு பெருங் கனவுகளை இந்நாட்டுத் தமிழ் மக்கள் மனங்களில் விதைத்த சமூகத் தலைவர்.

20.4.1903 ஆண்டு தமிழகத்தின், திருவாரூரில் பிறந்த அவருக்கு இன்று வயது 121.

கோ.சாரங்கபாணி சிங்கப்பூர் மண்ணில் தமது 21வது வயதில் 1924ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 16.3.1974 அன்று தமது இறுதி மூச்சை விடும் வரையில் சிங்கப்பூரராகவே வாழ்ந்தார்.

இங்கு வாழ்ந்த 50 ஆண்டு காலமும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், உயர்வு பற்றியே சிந்தித்தார், செயல்பட்டார்.

சிங்கப்பூர்த் தமிழ் மக்கள் தேடாது பெற்ற பெரு வரம் கோ.சாரங்கபாணி.

தமிழ் மொழி விழா கொண்டாடும் இத்தருணத்தில் கோ.சாரங்கபாணியின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் இந்நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களும் எண்ணிப் பார்ப்பது சிறப்பு.

தமிழ் மொழி வாரம் குறித்து கோ.சாரங்கபாணி 7.8.1941 அன்று தமிழ் முரசில் எழுதிய தலையங்கம் ஒன்றலிருந்து சில பகுதிகள் இங்கே. இன்று இதனை வாசிப்பது, தமிழ் மொழி விழாக் கொண்டாடும் நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க உதவும்:

“... எப்பொழுதும் “தமிழர்கள் எல்லாம் தமிழர்களே” என்ற ஐக்கியம் நிறுவும்படி ஒவ்வொரு தமிழரும், தமிழர் வாரத்தில் பிரசாரம் செய்ய வேண்டும்.

... தமிழ்க் கல்வியறிவில்லாத மனைவிகளையும் மக்களையும் சகோதர, சகோதரிகளையும் பெற்ற குடும்பத் தலைவர்கள் அவர்களுக்குத் தமிழ்க் கல்வியை அளிக்க தமிழர் வாரத்திலிருந்து தொடங்கிவிடுவதென பிரதிக்கினை செய்துகொள்ள வேண்டும். தமிழ்க் கல்வியறிவில்லாத தமிழ்த் தொழிலாளிகளையும் ஏனையோரையும் ஆங்காங்கு தொண்டர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு இராப்படிப்பு வசதிகள் கிடைக்க தமிழர் வாரத்தில் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட வேண்டும்.

... தமிழர்கள் எல்லாம் தமிழர் வாரத்தில் “தமிழர்”களாகவே திகழவேண்டும். தமிழிலேயே அவர்கள் சிந்திக்க வேண்டும்; தமிழிலேயே அவர்கள் உரையாட வேண்டும். ஆங்கிலத்தைக் கலந்து தமிழ் மொழியைச் சித்திரவதை செய்யும் பெரும் பாதகத்தை விட்டொழித்தேன் என அவர்கள் பிரதிக்கினை செய்துகொள்ள வேண்டும். நான் முதலில் தமிழன்; பிறகுதான் மற்ற இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணத்தை ஒவ்வொரு தமிழனும் கொள்ள வேண்டும்.

தமிழர் வாரம் தமிழுக்காக மகத்தான சேவை புரியச் சந்தர்ப்பம் அளிக்கும் ஒரு “பரிசுத்த” வாரமாகும். இவ்வாரத்தை ஒவ்வொரு தமிழனும்- முஸ்லிமாயிலும் இந்துவாயினும் புத்தராயினும் ஜெயினராயிலும் - பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழர் வாரத்தில் தமிழ்ப் பெருமக்கள் ஒன்று திரண்டு வேலை செய்வார்களானால்... இறுதியில் தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்துக்கு மணி முடிசூட்டி, எதிர்காலத் தமிழ்த் தோன்றல்கள் தலை நிமிர்ந்து, உலக மக்களின் முன் அணியில் இடம்பெற்று, தோளோடு தோளுரசி நாகரிகம் எனும் கோட்டை நாடிச் செல்ல முடியும்.”

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!