சமயப் பணிகளோடு சமூகத் தொண்டு

சமயப் பணிகளோடு சமூகத் தொண்டு

1 mins read
facf862d-ba8b-4288-a531-1748ecd0980a
வீடுகளுக்கு உணவும் மளிகைப் பொருள்களும் கொண்டுசென்று கொடுத்த தொண்டூழியர்கள். - படம்: ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

சிங்கப்பூரின் ஆலயங்கள் சமயப்பணியுடன் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் பல்வேறு வழிகளில் சமூகப்பணிகளை ஆற்றிவருகின்றது.

வெள்ளிக்கிழமைகளிலும் வார இறுதி நாட்களிலும் பொதுமக்களின் உதவியோடு அன்னதானம் வழங்குகிறது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஹவ்காங், கேலாங் வட்டாரங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு உணவுப் பொட்டலங்களையும், மளிகைப் பொருள்களையும் வழங்கியுள்ளது. ஹவ்காங், கேலாங் சமூக மன்றங்களின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஆலயத்துடன் இணைந்து பணியாற்றி ஏற்பாடுகளை மேற்கொண்டது..

பொருள்களைப் பொட்டலமிடும் தொண்டூழியர்கள்.
பொருள்களைப் பொட்டலமிடும் தொண்டூழியர்கள். - படம்: ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

தொண்டூழியர்கள் ஏப்ரல் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஒன்றுகூடி 43 குடும்பங்களில் இருக்கும் 150 பேருக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் மளிகைப் பொருள்களையும் பொட்டலமிட்டனர்.

பின்னர் வீடுகளுக்குச் சென்று பொருள்களை வழங்கினர்.

வழங்கப்பட்ட மளிகைப் பொருள்கள்.
வழங்கப்பட்ட மளிகைப் பொருள்கள். - படம்: ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

இந்த முதல் முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த சமூகப்பணியை மேலும் விரிவாக்கி, மாதம்தோறும் தொடர தொண்டூழியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் பல இளையர்கள் இந்தத் தொண்டூழியத்தில் இணைந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்