மலேசிய நெடுஞ்சாலையில் படுகாயமுற்ற சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி

மலேசிய நெடுஞ்சாலையில் படுகாயமுற்ற சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி

1 mins read
474248a1-d128-4cd8-89f2-dbcb927cbbca
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பந்தய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் ஒரு காரின்மேல் மோதியதில் படுகாயமடைந்தார். - படம்: யூடியூப்/எஸ்ஜி ரோடு விஜிலாண்டே

மலேசிய நெடுஞ்சாலையில் பந்தய மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் ஒருவர் காருடன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

கவாசாகி இஸட்எக்ஸ்1ஓஆர் ரகப் பந்தய மோட்டார் சைக்கிளை அந்த ஆடவர் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

எஸ்ஜி ரோடு விஜிலாண்டே அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் அந்த ஆடவர் சாலையின் இடத் தடத்திலிருந்து வலத் தடத்திற்கு மாறியதும் வெள்ளை காரின்மேல் அவர் மோதியதும் பதிவாகியுள்ளன.

காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி, சிங்கப்பூரிலிருந்து மலாக்கா சென்றுகொண்டிருந்த பந்தய மோட்டார் சைக்கிளோட்டிகளின் குழுவைச் சேர்ந்தவர் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

படுகாயமடைந்த அவர், ஜோகூரின் பத்து பகாட்டில் உள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

காருடன் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டதாகவும் அதையடுத்து அவரது கால், கை, உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் பத்து பகாட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் கூறினார்.

மோதலையடுத்து வெள்ளை கார் சுற்றிச் சுழன்றதாகவும் இருப்பினும் அதை ஓட்டிய மலேசியர் காயமின்றித் தப்பித்ததாகவும் காவல்துறை கூறியது.

பொறுப்பின்றி வாகனம் ஓட்டியதாக, இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்