மூன்று சுகாதார பொருள்கள் வேண்டாம்என ஆணையம் எச்சரிக்கை

மூன்று சுகாதார பொருள்கள் வேண்டாம்என ஆணையம் எச்சரிக்கை

1 mins read
9bf866eb-f5cd-45d1-88f2-8208f9ed113a
இந்தத் தயாரிப்புகள் ஷாப்பி, லசாடா போன்ற உள்ளூர் இணைய வர்த்தகத் தளங்களில் விற்கப்பட்டன எனக் கூறப்பட்டது. - படம்: அறிவியல் சுகாதார ஆணையம்

மூன்று சுகாதாரப் பொருள்களை வாங்க வேண்டாம், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை சுகாதார அறிவியல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த மூன்று தயாரிப்புகளிலும் தடைசெய்யப்பட்ட அல்லது வீரியமுள்ள பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட காரணத்தால் இந்த எச்சரிக்கையை வெளியிட்டதாக ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 28) தெரிவித்தது.

அவற்றில்,’சிபுட்ராமைன்’ எனும் பசியை அடக்கும் பொருளும் அதிக அளவில் பாதரசமும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என அது கூறியது.

88 டோட்டல் ஒயிட் அண்டர் ஆர்ம் க்ரீம், சௌசாண்டோ செல்லுலைட் மாத்திரைகள், பெலாங்சிங் டபுள் ஸ்ட்ராங் ஆகியன அந்த சுகாதாரப் பொருள்கள்.

மேற்குறிப்பிட்ட பொருள்களில் கடைசி இரு தயாரிப்புகள் எடை குறைப்புக்கு உதவும் பொருள்களாகச் சந்தைப்படுத்தப்பட்டவை.

அந்த இரு தயாரிப்புகளை உட்கொண்ட வாடிக்கையாளர்களுக்குக் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தயாரிப்புகள் ஷாப்பி, லசாடா போன்ற உள்ளூர் இணைய வர்த்தகத் தளங்களில் விற்கப்பட்டன எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்