தீச்சம்பவம்: 40 பேர் வெளியேற்றம், மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்

தீச்சம்பவம்: 40 பேர் வெளியேற்றம், மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்

1 mins read
82c969b1-96b5-4702-bf08-48f960a189cb
தீப்பற்றி எரிந்த கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அடைவதற்கு முன்பாகவே, அங்கிருந்து கிட்டத்தட்ட 40 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

ஃபிஷரி போர்ட் சாலையில் உள்ள இரண்டு மாடித் தொழில்துறைக் கட்டடத்தில் ஜூன் 28ஆம் தேதியன்று தீ மூண்டது.

கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கரும்புகை வெளியேறுவதை சாவ்பாவ் நாளிதழ் வெளியிட்ட காணொளியில் காண முடிந்தது.

காலை 10.25 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சம்பவ இடத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அடைவதற்கு முன்பாகவே, அங்கிருந்து கிட்டத்தட்ட 40 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்டடத்தில் 30 மீட்டருக்கும் 45 மீட்டர் பரப்பளவு கொண்ட அலுவலகத்தில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புப் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் அவருக்கு உடனே முதலுதவி வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்