புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தின் ஓய்வுக்கூடம் திறப்பு

1 mins read
d222aec8-717d-46ea-b0d1-9c5d9736ec82
சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தில் இருக்கும் சேட்ஸ் ஓய்வுக்கூடம். - படம்: ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இருக்கும் புதுப்பிக்கப்பட்டுள்ள ‘லவுஞ்ச்’ ஓய்வுக்கூடம் புதன்கிழமையன்று (ஜூலை 3) திறக்கப்பட்டுள்ளது.

அதை நடத்தும் சேட்ஸ் நிறுவனம் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம், இரண்டாம் முனையங்களில் உள்ள ஓய்வுக்கூடங்களைப் புதுப்பிக்கவும் சேட்ஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் முனையத்தில் இருக்கும் ஓய்வுக்கூடம், அதில் இளைப்பாறுவோர் சிங்கப்பூர் வாழ்க்கைமுறையை அனுபவிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்சா, சிக்கன் ரைஸ் போன்ற இங்குள்ள உணவங்காடிகளில் பிரபலமாக இருக்கும் உணவு வகைகள் ஓய்வுக்கூடத்தில் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

புதுப்பிக்கப்பட்டுள்ள சேட்ஸ் ஓய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் உணவு வகைகள்.
புதுப்பிக்கப்பட்டுள்ள சேட்ஸ் ஓய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் உணவு வகைகள். - படம்: ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்ஸ்
புதுப்பிக்கப்பட்டுள்ள சேட்ஸ் ஓய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் உணவு வகைகள்.
புதுப்பிக்கப்பட்டுள்ள சேட்ஸ் ஓய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் உணவு வகைகள். - படம்: ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்ஸ்

மேலும், உள்ளூர் ஓவியர்கள், மாணவர்கள் ஆகியோரின் படைப்புகளும் அங்கு இடம்பெறுகின்றன. ஒரு கண்காட்சி வழங்கியுள்ள படைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம், இரண்டாம் முனையங்களில் இருக்கும் ஓய்வுக்கூடங்கள் எப்போது புதுப்பிக்கப்படும் என்று சேட்ஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெரி மொக்கிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், குறிப்பிட்ட தேதிகளை வெளியிடும் நிலையில் சேட்ஸ் இல்லை என்று குறிப்பிட்டார். செயல்பாட்டுத் தேவைகளைக் கருத்தில்கொள்ளவேண்டிய சூழல் இருப்பதே அதற்கான காரணம் என்றும் அவர் சொன்னார்.

சேட்ஸ், பிளாஸா பிரீமியம் குழுமத்துடன் இணைந்து நான்காம் முனையத்திலும் ஓர் ஓய்வுக்கூடத்தை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்