சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விஞ்சியது

2 mins read
7c5e5f2e-489f-455f-b507-98a2a366cfa5
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடு வளர்ச்சிகண்டது.

இரண்டாம் காலாண்டுக்கான வர்த்தக, தொழில் அமைச்சின் முதற்கட்ட கணிப்புகளில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) அமைச்சு புள்ளி விவரங்களை வெளியிட்டது.

மேலும், முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மூன்று விழுக்காடாக திருத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 4.2 விழுக்காடாகப் பதிவானது. அதற்குப் பிறகு இவ்வாண்டு முதல் காலாண்டில்தான் ஆக அதிக வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வளர்ச்சி விகிதத்துக்கு இது பொருந்தும்.

பருவத்திகேற்ப சசிசெய்யப்பட்ட பின் காலாண்டு அடிப்படையில் இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் பொருளியல் 0.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது. 2023ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில்தான் வளர்ச்சி விகிதம் ஆக அதிகமாகப் பதிவானது.

ஆண்டு அடிப்படையில் பொருளியல் வளர்ச்சி விகிதம், புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 2.7 விழுக்காட்டைவிட அதிகமாகப் பதிவானது. காலாண்டு அடிப்படையில் வளர்ச்சி விகிதம் அவர்களின் முன்னுரைப்புக்கு ஏற்றவாறு பதிவானது.

ஆண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை மீண்டு வந்தது பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1.7 விழுக்காடு சுருங்கிய உற்பத்தித் துறை 0.5 விழுக்காடு வளர்ச்சிகண்டது.

கட்டுமானத் துறை 4.3 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. முன்னதாக 0.7 விழுக்காடு சுருங்கிய ஒட்டுமொத்த பொருள் உற்பத்தித் துறை, 1.3 விழுக்காடு வளர்ச்சிகண்டது.

பருவத்திகேற்ப சசிசெய்யப்பட்ட பின் காலாண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை 0.6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. காலாண்டு அடிப்படையில் முதல் காலாண்டில் அத்துறை 5.3 விழுக்காடு சுருங்கியிருந்தது.

அதேவேளை, சேவைத் துறையின் வளர்ச்சி விகிதம் குறைந்தது. முதல் காலாண்டில் மூன்று விழுக்காடாகப் பதிவான விகிதம் இரண்டாம் காலாண்டில் 1.9 விழுக்காட்டுக்குக் குறைந்தது. உணவுச் சேவைகள், சொத்துச் சந்தை உள்ளிட்டவை அத்துறையில் அடங்கும்.

இவ்வாண்டு பொருளியல், ஒன்றிலிருந்து மூன்று விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கணித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி கண்டிருக்கும் வளர்ச்சி, அதற்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்