போட்டித்தன்மையில் முதல்நிலையை சிங்கப்பூரிடம் இழந்தது சுவிட்சர்லாந்து

போட்டித்தன்மையில் முதல்நிலையை சிங்கப்பூரிடம் இழந்தது சுவிட்சர்லாந்து

2 mins read
23c61018-2113-45a1-a08d-8a3fb5339d41
2024ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. - படம்: புளூம்பெர்க்

பெர்ன்: உலகிலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளியல் என்னும் முதலாம் தரநிலையிலிருந்து மூன்றாம் இடத்திற்கு இறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.

முதலிடத்தை அது சிங்கப்பூரிடம் இழந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள், வலுவான சுவிஸ் ஃபிராங்க் நாணயம் ஆகியவற்றால் முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் தரநிலை இறக்கம் கண்டது.

‘2026 ஐஎம்டி உலகப் போட்டித்தன்மை தரவரிசை’ப் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியிடப்பட்டது.

பட்டியலில் உயர்தரம் பெற்ற ஐரோப்பிய நாடாக சுவிட்சர்லாந்து தொடர்ந்து நீடித்து வந்தநிலையில், ஆசிய நாடான ஹாங்காங் அதனை முந்தியது.

அதேவேளை, 2024 தரவரிசைப் பட்டியலில் பெற்ற அதே முதலிடத்தை சிங்கப்பூர் தற்போது பெற்றுள்ளது. அதற்கு அதன் வர்த்தகத் திறன் முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிகரிக்கும் புவிசார் அரசியல் நிலையற்ற தன்மை, மூலதன வரத்தில் மாற்றம் ஆகியவற்றால் எந்த ஒரு வலிமையான பொருளியலும் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்பதற்கு சுவிட்சர்லாந்து உதாரணம் என்று ஐஎம்டி தெரிவித்தது.

போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின்படி, உலகின் மிகப்பெரிய எல்லை தாண்டிய செல்வ மையமாக இருந்த சுவிட்சர்லாந்தை ஹாங்காங் அண்மையில் முந்தியுள்ளதாக பாஸ்டன் ஆலோசனைக் குழுமம் கூறியது.

அத்துடன், கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள வேளையில் சுவிட்சர்லாந்துக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.

விலை உயர்ந்த நாணய மதிப்பு மூலதன ஈர்ப்பைப் பாதிப்பதாகவும் விலைகளுக்கான தரவரிசையில் சரிவை ஏற்படுத்துவதாகவும் ஐஎம்டியின் உலகப் போட்டித்தன்மை மையத்தின் இயக்குநர் ஆர்ட்டுரோ பிரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவையும் சுவிட்சர்லாந்தின் செயல்திறன் குறைபாட்டையும் தற்போது காணமுடிகிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்