தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்: 3 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையொப்பமாயின

1 mins read
7bc58114-7072-42c8-89f2-9e1cf18cdbf6
சமூகத்திற்குத் தொடர்ந்து சேவை வழங்கும் கடப்பாட்டின் ஓர் அங்கமாகத் தமிழ் முரசு அதன் உத்திபூர்வ பங்காளிகளுடன் மூன்று புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையொப்பமிட்டுள்ளது. - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 90ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7), ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில், சமூகத்திற்குத் தொடர்ந்து சேவை வழங்கும் கடப்பாட்டின் ஓர் அங்கமாகத் தமிழ் முரசு அதன் உத்திபூர்வ பங்காளிகளுடன் மூன்று புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையொப்பமிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணித் தமிழ் நாளிதழான ‘இந்து தமிழ் திசை’யுடன் உள்ளடக்கப் பரிமாற்றம், வாசகர்களுக்கு மேம்பட்ட கண்ணோட்டத்தை வழங்குதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தாகியது.

‘சிண்டா’ எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து இளையர்களை இலக்காகக் கொண்ட கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யவும் சிண்டாவின் கல்வித் திட்டங்களையும் இளையரை எட்டும் திட்டங்களையும் அதிகரிக்கவும் தமிழ் முரசு ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும், தமிழ் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கவும் தமிழ் முரசை நிறுவிய தமிழவேள் கோ. சாரங்கபாணியின் கல்வித்துறைச் செயல்பாட்டு மரபைக் கட்டிக்காக்கவும், சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து கோ.சாரங்கபாணி கல்வி அறக்கட்டளை நிதியை மீண்டும் தொடங்குவதற்கான புரிந்துணர்வுக் குறிப்பும் கையெழுத்தானது.

குறிப்புச் சொற்கள்