தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்: நூல் வெளியீடு, நாளிதழின் முன்னாள் ஆசிரியர்களுக்கு மரியாதை

தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்: நூல் வெளியீடு, நாளிதழின் முன்னாள் ஆசிரியர்களுக்கு மரியாதை

1 mins read
81125a83-4468-4f24-a650-ecedb209ef8d
‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ் முரசின் 90 ஆண்டுப் பயணத்தை விவரிக்கும் சிறப்பு நூல் வெளியிடப்பட்டது.  - படம்: தமிழ் முரசு

கடந்த 90 ஆண்டுகளாகச் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் இன்றியமையாத குரலாக விளங்கும் தமிழ் முரசு, ஜூலை 6ஆம் தேதி, 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ் முரசின் 90 ஆண்டுப் பயணத்தை விவரிக்கும் சிறப்பு நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு மைல்கல் தருணங்களை எடுத்துரைக்கும் படங்கள் அடங்கிய நூலை அதிபர் தர்மன் சண்முகரத்னம் வெளியிட்டார்.

மேலும், பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ் வாசகர்களுக்குச் சேவை வழங்கும் பயணத்தில் தூண்களாக விளங்கிய தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

நிறுவனரும் முதல் ஆசிரியருமான தமிழவேள் கோ.சாரங்கபாணி சார்பாக அவரது மகள் ராஜம் சாரங்கபாணி, பேரன்கள் சுரேந்திரன், யோகேந்திரன் ஆகியோர் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்டனர்.

தமிழவேளை அடுத்துப் பொறுப்பேற்ற திரு வை.திருநாவுக்கரசு சார்பாக அவரது பேத்தியும் பேரனும் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, முன்னாள் ஆசிரியர்கள் டாக்டர் சித்ரா ராஜாராம், திருவாட்டி முருகையன் நிர்மலா, திரு ஜவஹரிலால் ராஜேந்திரன் மூவரும் சிறப்பிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்