சிங்கப்பூரின் முக்கியச் சமய விழாவாகவும் கலாசாரத் திருவிழாவாகவும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இனம், சமயம், மொழி போன்ற பேதங்களைக் கடந்து நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் தேசிய நிகழ்ச்சியாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.
சென்ற சனிக்கிழமை (ஜனவரி 31) இரவு 11.20 மணியளவில் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) இரவு 11.30 மணிவாக்கில் நிறைவுபெற்ற தைப்பூசத் திருவிழா 2026ல் தமிழ் முரசு பதிவு செய்த தருணங்களில் சில:
மேளம் கொட்டி, காவடி எடுத்த பக்தர்களிடம் சோர்வை எட்டிப் பார்க்க விடாமல் செய்தனர். - Tamil Murasu
ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்கள் இறையுணர்வு மேலோங்கி இருந்த பக்தர்களின் தாகத்தைத் தணிக்க உதவின. - படம்: த. கவி
பதிவுசெய்த நேரத்திற்கு முன்னதாகவே வந்த பக்தர்கள் ரேஸ் கோர்ஸ் சாலையிலிருந்த பந்தலில் காத்திருந்தனர். - படம்: த. கவி
நேர்த்திக்கடனை நிறைவேற்ற விடியும்வரை காத்திருக்க முடியாது என முடிவுசெய்து, இரவிலேயே பால்குடம் சுமந்து அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலை நோக்கி விரைந்த பக்தர்கள். - படம்: த. கவி
ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில், இந்து அறக்கட்டளை வாரியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன. - படம்: த. கவி
பால்குடம் எடுத்த பக்தர்களின் முதல் தொகுதி சனிக்கிழமை இரவு 11.20 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டது. - படம்: த. கவி
பிற இனங்களைச் சேர்ந்த பக்தர்களும் பால்குட வேண்டுதலை நிறைவேற்றினர். - படம்: த. கவி
இவ்வாண்டு 300க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து, அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். - படம்: த. கவி
பழுத்த பக்தியுடன் பிஞ்சுக் கைகள் ஏந்திய காவடி. - படம்: த. கவி
தைப்பூசத் திருவிழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருடனும் அளவளாவி மகிழ்ந்தார். - படம்: த. கவி
பால்காவடி சுமந்துசெல்லும் பக்தர். - படம்: த. கவி
இறைவனைத் தொழ வயது பொருட்டன்று எனத் தமக்கான வேண்டுதலை நிறைவேற்றக் கிளம்பிவிட்டார் இந்தச் சிறுமி. - படம்: த. கவி
கண்கவர் அலங்காரத்துடன் காவடி சுமந்துவரும் முருகனடியாரை ஆடிப் பாடி ஊக்கப்படுத்தும் சக பக்தர்கள். - படம்: த. கவி

