ஆர்ச்சர்ட் சாலையில் தனிப்பட்ட கருப்பொருளுடனான பெரிய வட்டாரப் பூங்கா ஒன்றை அமைக்க நகர மறுசீரமைப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 500 மீட்டர் நிலப்பகுதியை இஸ்தானா பூங்காவுடனும் டோபி காட் கிரீனுடனும் இணைத்துப் புதிய பூங்கா அமைக்கப்படும்.
புதிய பூங்காவை ஃபோர்ட் கேனிங் பூங்காவுடன் பாதசாரிகளுக்கான பாலம் ஒன்று இணைக்கும்.
பூங்கா முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதும் நகர மையத்தில் உள்ள அந்தப் பசுமை நிறைந்த இடத்தில் குடும்பங்கள் நேரில் சென்று தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாக நேரத்தை இனிதே கழிக்கலாம் என்று ஆணையம் கூறியது.
மத்திய வர்த்தக வட்டாரத்தில், எம்ஆர்டி நிலையத்துக்கு மேல் இருக்கும் ராஃபிள்ஸ் பிளேஸ் பூங்கா 2028ஆம் ஆண்டுக்குள் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் அங்கு எளிதில் சென்றடையக்கூடிய வகையில் பசுமை நிறைந்த இடமாக அது மேம்படுத்தப்படும்.
மரினா பே வட்டாரத்தில் புதிய அம்சங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றில் புதிய நல்வாழ்வுத் தளமும் பொழுதுபோக்குகளுக்கான இடங்களும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிலேத்தார் ஈஸ்ட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

