நான்கு வாகனங்கள் மோதலில் மூவர் காயம்

1 mins read
e53f16b2-df94-4df2-9ea7-40cebcffc527
விபத்தில் தொடர்புடைய மஞ்சள் நிற காரின் முன்பகுதி பெரிதும் சேதமடைந்ததுபோல் தெரிந்தது. - படம்: ஷின் மின் வாசகர்

ஈசூன் அவென்யூ 2ல் வியாழக்கிழமை (அக்டோபர் 16) மாலை மூன்று கார்களும் ஒரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தையடுத்து மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து மாலை 6.45 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

கார் ஒன்றின் 78 வயது ஆண் ஓட்டுநர், அதில் பயணம் செய்த 69 வயதுப் பெண், இன்னொரு காரின் 46 வயதுப் பெண் ஓட்டுநர் ஆகிய மூவரும் காயமுற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

அம்மூவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்தில் தொடர்புடைய வாகனங்களில் ஒன்றான மஞ்சள் நிற கார் போக்குவரத்திற்கு எதிர்த்திசையில் இயக்கப்பட்டதாக சாவ்பாவ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

அந்த காரின் முன்பகுதி பெரிதும் சேதமடைந்திருந்ததை விபத்து தொடர்பான படம் ஒன்று காட்டியது. அது மற்ற இரு கார்கள்மீது மோதியதாகத் தெரிகிறது.

விபத்து குறித்து 29 வயதுப் பெண் ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்