திங்கட்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை, திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை

திங்கட்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை, திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Nov 2026 - 12:34 pm

1 mins read

சிங்கப்பூரின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (நவம்பர் 9) பிற்பகலில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வடக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் திங்கட்கிழமை காலை 11.42 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தது.

நண்பகல் 12.10 மணி முதல் பிற்பகல் 1.10 மணி வரை அவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், லோரோங் பெஞ்சாலாக் முதல் கம்பீர் வாக் வரையிலான லோரோங் கம்பீர் பகுதியில் பிற்பகல் 12.35 மணி வரை திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, நவம்பர் முற்பாதியில் பெரும்பாலான நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் மிதமானது முதல் பலத்த, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிட்ட இருவார வானிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. சில நாள்களில் மாலை வேளை வரை மழை நீடிக்கக்கூடும் என்றும் அது கூறியது.

லேசான, மாறுபடும் காற்றுடன் கூடிய இடைப்பருவ மழைக்காலத் தொடக்கம், அண்மையில் நிலவிய புகைமூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்