வடக்கு-கிழக்கு பெருவிரைவு ரயில் பாதையில் ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதில் சேவைத் தாமதம் ஏற்பட்டது.
ஈசூன், செம்பவாங் நிலையங்களுக்கு இடையே பயண நேரம் 10 நிமிடங்கள் கூடுதலாக இருக்கலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் பயணிகளைக் கேட்டுக்கொண்டது. பிற்பகல் 3.22 மணிக்கு, ஆர்ச்சர்ட், மரினா சவுத் பியர் நிலையங்களை நோக்கிச் செல்லும் பயணிகளை, உட்லண்ட்ஸ் நிலையத்தில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையைப் பயன்படுத்துமாறு எஸ்எம்ஆர்டி கேட்டுக்கொண்டது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.20 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்ட பாதையில் ரயில் சேவை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈசூன், உட்லண்ட்ஸ் நிலையங்களுக்கு இடையே இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
“உங்கள் பயணத்தில் தாமதம் ஏற்படுவதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூறிய எஸ்எம்ஆர்டி, பிரச்சினையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது.