தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாளான இம்மாதம் 19ஆம் தேதி சில பொதுப் பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகள் கூடுதல் நேரம் இயங்கும்.
அன்றைய தினம் வடக்கு-கிழக்கு, கிழக்கு-மேற்கு, வட்ட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைகளில் ரயில் சேவைகள் வழக்கத்தைவிட கூடுதல் நேரம் இயங்கும். சில பேருந்துச் சேவைகளும் அன்றிரவு கூடுதல் நேரம் இயங்கும்.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிக்கையில் இத்தகவல்களை வெளியிட்டது.
வட்டப் பாதையில் அக்டோபர் 19ஆம் தேதியன்று கடைசி ரயில்கள் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திலிருந்து இரவு 11.30 மணிக்கும் டோபிகாட் நிலையத்திலிருந்து 11.55 மணிக்கும் புறப்படும். வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்குப் பாதைகளில் கடைசி ரயில்கள் நள்ளிரவுக்குப் பிறகு 12.30 மணிக்கு சிட்டி ஹால் நிலையத்திலிருந்து புறப்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் கடைசி ரயில்கள் உட்லண்ட்ஸ் நார்த், பேஷோர் நிலையங்களிலிருந்து நள்ளிரவுக்குப் பிறகு 12.12 மணிக்குப் புறப்படும்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவைகள், சாங்கி விமான நிலையப் போக்குவரத்துச் சேவைகளில் மாற்றம் இல்லை என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
மேலும், 18 எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவைகள் அக்டோபர் 19ஆம் தேதி கூடுதல் நேரம் இயங்கும். 300, 301, 302, 307, 983A, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 181, 240, 241, 243G, 974A உள்ளிட்டவை கூடுதல் நேரம் இயக்கும் பேருந்துச் சேவைகளாகும்.

