அனுமதியில்லாத என்யுஎஸ், என்டியு சுற்றுலாத் திட்டங்கள் விற்பனை

அனுமதியில்லாத என்யுஎஸ், என்டியு சுற்றுலாத் திட்டங்கள் விற்பனை

1 mins read
daac6505-b9c7-44eb-ac9b-e6fbf5ce418a
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்). - படம்: என்யுஎஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தையும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தையும் (என்டியு) அவற்றின் அனுமதியில்லாமல் சுற்றிக்காட்ட இணையத்தில் திட்டங்கள் விற்கப்படுவதாக சிஎன்ஏ ஊடகம் கண்டுபிடித்துள்ளது.

கெட்யுர்கைட் (GetYourGuide) எனப்படும் மூன்றாம் தரப்புப் பதிவுத் தளத்தில் அத்திட்டங்கள் விற்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் கட்டணம் 63லிருந்து 300 வெள்ளி வரை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

அத்திட்டங்களில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று என்யுஎஸ், என்டியு ஆகிய இரண்டும் சிஎன்ஏ தொடர்புகொண்டபோது தெரிவித்தன.

அந்த சுற்றுலா விளம்பரப் பதிவுகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து என்டியு ஆராய்ந்துவருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். நடவடிக்கை எடுக்கப்படுமா என்று என்யுஎஸ் குறிப்பிடவில்லை. எனினும், அப்பல்கலைக்கழகம் தனது வீசாட் பக்கத்தில் இம்மாதம் 1ஆம் தேதி மாண்டரின் மொழியில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதுபோன்ற அதிகாரபூர்வமற்ற சுற்றுலா ஒன்றில் சிஎன்ஏ இம்மாதத் தொடக்கத்தில் கலந்துகொண்டது. அந்தச் சுற்றுலா கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

என்யுஎஸ் விதிமுறைகளின்படி உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே அதன் வளாகத்தில் சுற்றிக்காட்ட அனுமதி உண்டு. அதேபோல், என்டியு வளாகத்தைச் சுற்றிக்காட்ட அதனிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்என்யுஎஸ்என்டியுசிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்சுற்றுலாவிற்பனைவிதிமுறை