குடியிருப்புகளுக்கான நிலப்பகுதிகளை விற்பனைக்கு விடும் நகர மறுசீரமைப்பு ஆணையம்

2 mins read
09106908-35cb-4efe-971d-7c1e7953f984
டார்சட் சாலை நிலப்பரப்பு, அப்பர் தாம்சன் சாலை நிலப்பரப்பு, தெலுக் பிளாங்கா நிலப்பரப்பு ஆகியவற்றுக்கான ஏலக்குத்தகைக்கான இறுதி நாள் முறையே அக்டோபர் 9, அக்டோபர் 23, நவம்பர் 4. - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

டார்சட் சாலை, அப்பர் தாம்சன் சாலை, தெலுக் பிளாங்கா சாலை ஆகிய மூன்று வட்டாரங்களில் குடியிருப்புகளுக்கான நிலப்பகுதிகள் நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிலப்பகுதிகளிலும் ஏறத்தாழ 1,765 தனியார் வீடுகளைக் கட்டலாம்.

டார்செட் சாலையில் வீடுகளைக் கட்ட விற்பனைக்கு விடப்பட்டுள்ள நிலப்பகுதியின் பரப்பளவு 10,399 சதுர மீட்டராகும். அங்கு கிட்டத்தட்ட 425 வீடுகளைக் கட்டலாம்.

அப்பர் தாம்சன் சாலையில் வீடுகளைக் கட்ட விற்பனைக்கு விடப்பட்டுள்ள நிலப்பகுதியின் பரப்பளவு 24,421.9 சதுர மீட்டராகும். அவ்விடத்தில் ஏறத்தாழ 595 வீடுகளைக் கட்டலாம்.

தெலுக் பிளாங்கா சாலையில் வீடுகளைக் கட்ட விற்பனைக்கு விடப்பட்டுள்ள நிலப்பகுதியின் பரப்பளவு 13,688.9 சதுர மீட்டராகும். அங்கு ஏறத்தாழ 745 வீடுகளைக் கட்டலாம்.

மூன்று இடங்களுக்கும் 99 ஆண்டுகள் குத்தகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு விடப்படும் 5,030 வீடுகளில் இந்த மூன்று இடங்களில் கட்டப்பட இருக்கும் வீடுகளும் அடங்கும்.

டார்சட் சாலையில் விற்பனைக்கு விடப்படும் நிலப்பரப்பு நகர மையத்துக்கு அருகில் இருப்பதாலும் நடக்கும் தூரத்தில் ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம் இருப்பதாலும் அதை வாங்க கிட்டத்தட்ட மூன்று சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் முயற்சி செய்யக்கூடும் என்று ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து முகவையின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யிப் தெரிவித்தார்.

டார்சட் சாலை நிலப்பரப்பு, அப்பர் தாம்சன் சாலை நிலப்பரப்பு, தெலுக் பிளாங்கா நிலப்பரப்பு ஆகியவற்றுக்கான ஏலக்குத்தகைக்கான இறுதி நாள் முறையே அக்டோபர் 9, அக்டோபர் 23, நவம்பர் 4.

குறிப்புச் சொற்கள்