ஹவ்காங் அவின்யூ 6, எண் 3, பொங்கோல் சமூக மன்றத்தில் உள்ள அரங்கில் வரும் சனிக்கிழமை (13-09-2025) மாலை 6:00 மணிக்கு ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ என்ற தமிழ் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி 95 ஆவது சந்திப்பு நடைபெறும்.
வழக்கமான இலக்கியச் சிற்றுரைகள் மற்றும் தாய்-சேய் இணைந்து படைக்கும் “வேரும் விழுதும்” போன்ற அங்கங்களுடன் இந்த மாதம் முனைவர் ஏ.ராஜ்மோகன் படைக்கும் ‘தமிழ் இலக்கியங்களில் குல குறியியல்’ எனும் தலைப்பில் சிறப்புரையும் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி ‘அடி’ எனும் தலைப்பில் அறிமுகவுரையும் இடம்பெறவுள்ளன.
மேல் விவரங்களுக்கு பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தியை 9228 8544 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இடம்: பொங்கோல் சமூக மன்றம், 3, ஹவ்காங் அவின்யூ 6, #02-02,சிங்கப்பூர் - 538808
தொடர்புக்கு: 92288544 என்ற எண்ணில் அழைக்கவும்.