இணைய மோசடிகளைக் கண்காணிக்கும் தொண்டூழியர்கள்: என்சிபிசி அமைப்பு

இணைய மோசடிகளைக் கண்காணிக்கும் தொண்டூழியர்கள்: என்சிபிசி அமைப்பு

2 mins read
c3c00f7a-9e6f-4f31-bcde-d64efbf9c965
தேசியக் குற்றத் தடுப்பு மன்றத்தின் தலைவர் ஜெரால்டு சிங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் அங்கமாக இணைய மோசடிகளைக் கண்டறிய அத்தளத்தைக் கண்காணிக்கத் தொண்டூழியர்கள் சேவையாற்றுவர்.

அப்புதிய திட்டத்தில் காவல்துறைக்கு உதவியாகத் தொண்டூழியர்கள் 100 பேர் மோசடிகளைக் கண்டறியவும் அவற்றைத் தடுக்கவும் செயலாற்றிவருகின்றனர்.

‘சைபர்காப்’ (Cyber COP) எனப்படும் ‘பவனிவரும் இணையக் குடிமக்கள்’ என்ற பெயரில் தேசியக் குற்றத் தடுப்பு மன்றமும் (என்சிபிசி) காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டம் அது என்று அம்மன்றத்தின் தலைவர் ஜெரால்டு சிங்கம் கருத்துரைத்தார்.

முறையான பயிற்சிகளைப் பெற்ற அந்தத் தொண்டூழியர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் இணையத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுவருவதையும் அவர் தெரிவித்தார்.

மின்னிலக்க யுகத்தில் குற்றத் தடுப்பு நடைமுறைகளைக் காலத்துக்கு ஏற்பத் தகவமைத்து, புதிய பங்காளிகளை கண்டறிந்து வரவேற்று, அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்களை அவற்றில் இணைத்து அவர்கள் பங்கெடுக்க வாய்ப்பளிப்பது என்சிபிசி அமைப்பின் நோக்கமாகும்.

அந்த முயற்சிகள், தேசியக் குற்றத் தடுப்பு மன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) ஏற்பாடு செய்திருந்த குற்றத் தடுப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தெளிவாக விளக்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் 10 அமைப்புகளுக்குப் பலவகையான குற்றங்களைத் தடுக்க அவை உதவியதற்காக விருதுகள் வழங்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டன.

மோசடிப் பரிவர்த்தனைகளைத் தடுத்தது, கடையில் திருடரை அடையாளம் கண்டது போன்றவை அச்செயல்பாடுகளில் சில.

யூஓபி வங்கி, கோ-அஹெட் சிங்கப்பூர், ஓசிபிசி வங்கி, சிங்கப்பூர் பூல்ஸ், மரினா பே சேண்ட்ஸ், ஷின்மின் நாளிதழ், டவர் டிரான்சிட், எஸ்பிஎஸ் டிரான்சிட், எம் ஹோட்டல் சிங்கப்பூர் சிட்டி சென்டர், சியான் சே மருத்துவக் கழகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்