ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரு வாரங்களும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஒருசில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் ஒருசில பகுதிகளில் சில நாள்கள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சுமத்ரா புயலால் அதிகாலையிலும் காலை நேரத்திலும் நாடெங்கிலும் இடியுடன் மழை பெய்து, பலத்த காற்று வீசக்கூடும்.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில், பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிடக் குறைவான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் 34 டிகிரி செல்சியசுக்குக் குறைவாக இருக்கும். ஆனால், ஒருசில நாள்களில் 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும்.
தெற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒருசில இரவுகளில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுக்குமேல் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
ஜூலையின் ஆக அதிகமான வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸ். ஜூலை 5ஆம் தேதி சுவா சூ காங், கிளமென்டி வட்டாரங்களில் இந்த வெப்பநிலை பதிவானது. ஆகக் குறைவான 21.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, நாடெங்கிலும் இடியுடன் மழை பெய்தபோது அட்மிரல்டி வட்டாரத்தில் பதிவானது.