தைப்பூசத்தில் காவடியைச் சுமக்கும் பெண்ணாகப் பலரது கவனத்தையும் ஈர்த்தார் ஷாமினி நடராஜன், 52.
தன் நெருங்கிய நண்பர்கள் உடன் நடக்க, அவர் இவ்வாண்டு காவடியைச் சுமந்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக அவர் பால் காவடி சுமந்து வந்துள்ளார்.
12 வயதிலிருந்தே அவர் தன் தாயாருடன் தைப்பூசத்தில் பால்குடம் சுமந்தார். தாயாரின் மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து அவர் பால்காவடி சுமக்கத் தொடங்கினார்.
“என் அத்தையும் பால் காவடி சுமப்பவர். அவரைக் கண்டு பால்காவடி தூக்க எனக்கும் உந்துதல் கிடைத்தது,” என்றார் ஷாமினி.
முதன்முதலில் உறவினரின் பால்காவடியைத் தூக்கியதாகவும் பின்னர் இன்னும் பெரிய காவடி ஒன்றை வாங்கும் அவசியம் தமக்கு ஏற்பட்டது என்றார். “என் நண்பருடன் சேர்ந்து மற்றொரு பால்காவடி வாங்கினேன். ஒவ்வோர் ஆண்டும் அதை இன்னும் அழகுபடுத்த சில சில மாற்றங்கள் செய்கிறேன்,” என்றார் ஷாமினி.
“எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முறையாக அலகு குத்தினேன். ஒற்றை நெற்றி அளவு அலகு குத்துதலோடு தொடங்கி நாளடைவில் மூன்று நெற்றி அலகு குத்துவதற்கு முன்னேறினேன்,” என்றார் ஷாமினி.
“காவடியைச் சுமக்க வேண்டும் என்பது எனக்குள்ளிருந்து வந்த உணர்வு.
தொடர்புடைய செய்திகள்
“சென்ற ஆண்டு அனைத்தும் சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி கூறுவதற்கும் வரும் ஆண்டு சிறப்பாக நடைபெறுவதற்கும் இது நான் செய்யும் முயற்சி,” என்றார் ஷாமினி.

