ஜூ செங் சாலையில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 16பி கார் நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு காரில் 42 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
இரவு கிட்டத்தட்ட 8.25 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் மதர்ஷிப் செய்தித் தளத்திடம் தெரிவித்தன.
அந்தப் பெண், கறுப்பு நிறக் கார் ஒன்றுக்குள் அசைவின்றிக் கிடந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிர் நீத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அன்றிரவே காவல்துறையினர், கார் நிறுத்துமிடத்தின் ஒரு பகுதியைச் சுற்றித் தடுப்புகளை வைத்திருந்ததாக ஷின் மின் நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.
நள்ளிரவு வரை காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்த நிலையில், மாண்டவரின் குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படும் சிலர் சம்பவ இடத்தில் கூடினர்.
சடலத்தைப் பார்த்தபின், இரண்டு பேர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, காரிலிருந்து பணத்தையும் சிவப்புப் பணப் பைகளையும் சாயம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வாளியையும் காவல்துறை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் மரணத்தில் சூது நிகழவில்லை எனத் தற்போது நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.