வளர்ப்புப் பிள்ளைகளைத் துன்புறுத்திய மாதுக்குச் சிறை

வளர்ப்புப் பிள்ளைகளைத் துன்புறுத்திய மாதுக்குச் சிறை

1 mins read
மகளின் மரணம் தொடர்பில் முன்னதாகக் கணவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது
c83773be-b1b7-48fd-9e6f-0cd7faf7df35
வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அந்த மாதுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பட்டினிபோடுவது உள்ளிட்ட செயல்களின் மூலம் வளர்ப்புப் பிள்ளைகளைத் துன்புறுத்திய மாதுக்கு ஆறு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அந்த மாதுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இழைத்த கொடுமையால் பிள்ளைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் தங்களின் வயதுப் பிரிவில் இருக்கும் 97 விழுக்காட்டினரைவிட சிறிதான தோற்றத்துடன் எடை குறைந்து காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த இரு பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டாத அவர் தனக்கு இரக்கம் காட்டுமாறு கேட்டுக்கொண்டது ஆச்சரியம் கலந்த வருத்தம் தருகிறது,” என்று மாவட்ட நீதிபதி யூஜீன் டியோ கூறினார்.

சம்பந்தப்பட்ட மாதின் கணவருக்கு, அவருக்குப் பிறந்த ஆயீஷா எனும் சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை இல்லாத அளவு அதிகமாக 34.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி விதிக்கப்பட்டன. பிறகு அவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

தந்தை ஏற்படுத்திய தலைக் காயத்தால் ஆயீஷா 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது ஐந்து.

துன்புறுத்தப்பட்டு ஆனால் உயிர் பிழைத்த ஆயீஷாவின் தம்பிக்கு அந்தக் காலகட்டத்தில் சுமார் நான்கு வயது இருந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்