தமிழ் முரசு 90 சமூகத்தின் சாதனை

தமிழ் முரசு 90 சமூகத்தின் சாதனை

3 mins read
cbc4b17f-0e20-4491-bf6c-d74a2b17ee6c
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின் ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். படத்தில் துணையமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் மாநாட்டை நடத்திய இளையர்களும் தமிழ் முரசு குழுவினரும். - படம்: பே.கார்த்திகேயன்

தமிழ் முரசின் 90வது ஆண்டு, வளர்ச்சி நிறைந்த ஆண்டு.

தொழில்நுட்பத்தில் பெரும்பாய்ச்சலெடுத்தது. முரசின் உருவாக்கத்திலும் அதன் வெளியீடுகளிலும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் மேம்பாடு காண்கிறது.

அச்சிலும் இணையத்திலும்  காலூன்றிய தமிழ் முரசு சமூக ஊடகங்களிலும் தடம்பதித்து வருகிறது. இளையர் உரையாடல்கள், நடப்பு விவகாரம், மொழி, சமூகம், விளையாட்டு எனப் பல துறைகளிலும் காணொளிகள், வலையொளிகள், கலந்துரையாடல்களைத் தமிழ் முரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. படத்தில் இளைய தலைமுறையின் ‘தமிழ் கொஞ்சம் டிலுலு நிறைய சொலுலு’ உரையாடல்.
அச்சிலும் இணையத்திலும் காலூன்றிய தமிழ் முரசு சமூக ஊடகங்களிலும் தடம்பதித்து வருகிறது. இளையர் உரையாடல்கள், நடப்பு விவகாரம், மொழி, சமூகம், விளையாட்டு எனப் பல துறைகளிலும் காணொளிகள், வலையொளிகள், கலந்துரையாடல்களைத் தமிழ் முரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. படத்தில் இளைய தலைமுறையின் ‘தமிழ் கொஞ்சம் டிலுலு நிறைய சொலுலு’ உரையாடல். - படம்: தமிழ் முரசு

இளையர்களின் கவனம் பெற்று, தொடர்ச்சியை உறுதிசெய்வதில் முழுமூச்சுடன் இறங்கியது. ‘இளைய தலைமுறை’ பிரிவுத் தொடக்கமே காற்று வேகம். ஓராண்டுக்குள் எட்டுத் திக்கையும் தொட்டு நிற்கிறது.

சமூகப் பிணைப்பு இன்னும் வலுவடைந்தது.

6.7.2025ல் தொடங்கிய தமிழ் முரசின் 90வது ஆண்டுக் கொண்டாட்டம் 4.7.2026 சனிக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டுடன் சிறப்பாக நிறைவுகண்டது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின்  ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின் ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். - படம்: பே.கார்த்திகேயன்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின் ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். படத்தில் மாநாட்டை நடத்திய இளையர்களும் தமிழ் முரசு குழுவினரும். படம்: பே.கார்த்திகேயன்

நூற்றாண்டை நோக்கிய தமிழ் முரசின் வெற்றிப் பயணம், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் சாதனை!

90வது ஆண்டுநிறைவு, மகத்தான தொடக்கம்

6.7.2025ல் நடந்த தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் (வலமிருந்து) எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம், தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட். பின்னணித் திரையில், அன்றைய காலத்துத் தமிழ் முரசு அலுவலகப் புகைப்படம். ஊழியர்களுடன் நடுவில் கோ.சாரங்கபாணி.
6.7.2025ல் நடந்த தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் (வலமிருந்து) எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம், தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர், எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட். பின்னணித் திரையில், அன்றைய காலத்துத் தமிழ் முரசு அலுவலகப் புகைப்படம். ஊழியர்களுடன் நடுவில் கோ.சாரங்கபாணி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவைச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் 6.7.2025ஆம் நாளன்று ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் கொண்டாடியது. அதிபர் தர்மன் சண்முகரத்னம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மொழி, இலக்கிய, சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், மாணவர்கள், இளையர்கள், வாசகர்கள் எனப் பல தரப்பினரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து வந்த தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூரின் நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.

தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிப்பதற்கு, தமிழ் முரசுக்கு ஆதரவு நல்குவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.

தமிழ் முரசு நகரும் கண்காட்சி

6.7.2025 முதல் மூன்று மாதங்களுக்குப் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் முரசின் நீண்ட வரலாற்றைக் கூறும் நகரும் கண்காட்சி.
6.7.2025 முதல் மூன்று மாதங்களுக்குப் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் முரசின் நீண்ட வரலாற்றைக் கூறும் நகரும் கண்காட்சி. - படம்: தமிழ் முரசு

முரசின் இளைய தலைமுறை

தமிழ் முரசின் இளையர் தளமான ‘இளைய தலைமுறை’ 2025 செப்டம்பர் 28ஆம் தேதி ஒன்பீப்பள்.எஸ்ஜி (OnePeople.sg) அமைப்புடன் இணைந்து இந்திய இளையர்களுக்காக ‘இன உறவுகள்: எதிர்வரும் போக்குகளும் இளையர் தலைமைத்துவமும்’ என்ற கலந்துரையாடலை நடத்தியது. பிப்ரவரி மாதத்தில் நிறுவப்பட்ட அத்தளம் அன்றைய நாள் அதிகாரபூர்வ தொடக்கம் கண்டது.

சமூக ஊடகங்களில் செயல்படும் அத்தளம், இளையர்களிடமும் பெரியவர்களிடமும் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரின் தமிழ், இந்திய இளையர்கள் தங்கள் எண்ணங்கள், கருத்துகள், பார்வைகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.

 ‘இளைய தலைமுறை’ ஒன்பீப்பள்.எஸ்ஜி அமைப்புடன் 28.9.2025ல் நடத்திய கலந்துரையாடலில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (இடது).  வழிநடத்திய தமிழ் முரசு ஊடக வாசகர், வளர்ச்சி ஆசிரியரும் தப்லா ஆசிரியருமான எஸ். வெங்கடேஷ்வரன்.
 ‘இளைய தலைமுறை’ ஒன்பீப்பள்.எஸ்ஜி அமைப்புடன் 28.9.2025ல் நடத்திய கலந்துரையாடலில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (இடது). வழிநடத்திய தமிழ் முரசு ஊடக வாசகர், வளர்ச்சி ஆசிரியரும் தப்லா ஆசிரியருமான எஸ். வெங்கடேஷ்வரன். - படம்: சாவ்பாவ்

தப்லா! வார இதழின் இணையத்தளம்

தமிழ் முரசின்கீழ் இயங்கும் ஆங்கில ஊடகமான தப்லா! வார இதழின் இணையத்தளம் 2025 நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்டப்பட்டது. இதழின் புதிய வடிவமும் அறிமுகமானது. நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

புதிய இணையத்தளம் மூலமாக இந்தியச் சமூகத்துடன் வலுவான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள தப்லா! இலக்கு கொண்டுள்ளது.

எஸ்பிஎச் மீடியா அரங்கில் 19.11.2025ஆம் நாள் நடந்த  தப்லா! நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் மக்களுடன் கலந்துரையாடினார். தப்லா! ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் உரையாடலை வழிநடத்தினார்.
எஸ்பிஎச் மீடியா அரங்கில் 19.11.2025ஆம் நாள் நடந்த தப்லா! நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் மக்களுடன் கலந்துரையாடினார். தப்லா! ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் உரையாடலை வழிநடத்தினார். - படம்: தமிழ் முரசு

முரசின் இளமைத் துடிப்பு ‘முரசு 360’

26.4.2026 அன்று நடைபெற்ற முரசு 360 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், தமிழ் முரசு ஊழியர்களுடன் நிகழ்ச்சியில் பங்களித்த இளையர்கள்.
26.4.2026 அன்று நடைபெற்ற முரசு 360 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், தமிழ் முரசு ஊழியர்களுடன் நிகழ்ச்சியில் பங்களித்த இளையர்கள். - படம்: த.கவி

தமிழ்மொழி விழா 2026ன் நிறைவு நிகழ்ச்சியாக அரங்கேறியது ‘முரசு 360’.

விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் முழுமையான 360 பாகைக் கோணப் பார்வையை வழங்கினர் தமிழ் முரசின் 15 இளம் மாணவச் செய்தியாளர்கள்.

தமிழ்மொழி விழாவின் உற்சாகத்தையும் படைப்பாற்றலையும் மொத்தமாகக் கண்முன் நிறுத்திய இளையர்களின் ஆர்வத்தையும் துடிப்பையும் அனைவரும் பாராட்டினர்.

டெசன்சன் ரோட்டில் உள்ள ‘சிவில் சர்விஸ் கிளப்’ அரங்கத்தில் இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

ஆடல் பாடலுடன் கலந்துரையாடல்

தமிழ் முரசின் ‘இளைய தலைமுறை’யும் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக் குழுவினரும் இணைந்து நடத்திய ‘ஆரா 10/10’ (Aura 10/10) நிகழ்ச்சியில் இளையர்கள் மனம் திறந்து பேசினர், மனமகிழ்ந்து பாடி ஆடினர்.

இவ்வாண்டு மே 23ஆம் தேதி எஸ்பிஎச் மீடியா அரங்கில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் 18 முதல் 25 வயது வரையிலான இளையர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

23.5.2026ல் நடந்த ‘ஆரா 10/10’  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு  (நடுவில் கறுப்புச் சட்டை அணிந்திருப்பவர்) இளையர்களின் துடிப்பான பங்கேற்பில் மகிழ்ந்தார்.
23.5.2026ல் நடந்த ‘ஆரா 10/10’  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு (நடுவில் கறுப்புச் சட்டை அணிந்திருப்பவர்) இளையர்களின் துடிப்பான பங்கேற்பில் மகிழ்ந்தார். - படம்: த.கவி
குறிப்புச் சொற்கள்