இக்கட்டில் கைகொடுக்கும் இருநாட்டு உறவு

இர்‌‌‌ஷாத் முஹம்மது

கொரோனா கொள்ளைநோயின் கோரமான கரங்களில் மூச்சுவிடத் திணறும் இந்தியாவுக்கு உயிர்வாயு அளித்து முதலுதவி செய்துள்ளது சிங்கப்பூர்.

காலத்தில் சிங்கப்பூர் செய்த உதவி சிறியதென்றாலும் அதை ஞாலத்தைவிடப் பெரியதாகக் கருதிப் போற்றுகிறது இந்தியா.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவு இந்த இக்கட்டான காலத்தில் மேலும் சிறப்படைந்துள்ளது என்­றார் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் திரு பெரி­ய­சாமி கும­ரன்.

“கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல பொருட்­களும் மருத்­துவ வச­தி­களும் இந்­தி­யா­விற்­குப் பெரு­ம­ள­வில் தேவைப்­படு­கிறது. சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து அவற்றை ஒரு­மு­கப்­ப­டுத்தி அனுப்பி வைக்­க­மு­டிந்­தது மகிழ்ச்சி அளிக்­கிறது,” என்­ற அவர் அதுகுறித்து விவரித்தார்.

உயிர்வாயுக் கொள்­க­லன்­கள், உயிர்­வாயு செறி­வூட்­டி­கள், ஆக்­ஸி­மீட்­டர், சிலிண்­டர் வால்வ், ஃப்லோமீட்­டர் வால்வ், வென்­டி­லேட்­டர்­கள் போன்­ற அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்களின் விநி­யோ­கிப்­பா­ளர்­களை அடை­யா­ளம் காண சிங்கப்பூர் அர­சாங்கம் ஆத­ரவு நல்­கி­யது.

கிருமிப் பரவலைச் சமாளிக்க சில மாநில அர­சு­களும் இந்­திய நிறு­வ­னங்­களும் கோரிய பொருட்களைக் கொள்முதல் செய்ய பல நாடு­க­ளையும் தொடர்­பு­கொண்­டோம். இதில் வர்த்­தக, தள­வாட மையமாக விளங்­கும் சிங்­கப்­பூரின் அனுபவம் மிக­வும் கைகொடுத்தது.

ஆஸ்­தி­ரே­லியா, மற்ற ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து வாங்­கிய பொருட்­க­ளை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து இந்­திய ஆகா­யப்­படை விமா­னங்­க­ளி­லும் கடற்­படை கப்­பல்­க­ளி­லும் இந்­தி­யா­விற்கு அனுப்­பப்­பட்­டன.

தெமா­செக் அற­நி­று­வ­னம் போன்ற சிங்­கப்­பூ­ரின் அரசு தொடர்­பு­டைய நிறு­வ­னங்­களும் டிபிஎஸ் வங்கி, சிங்­கப்­பூர் இந்­தி­யர் வர்த்தக, தொழில் சபை, லி‌‌‌ஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமைச் சங்­கம் உள்ளிட்ட அமைப்புகளும் சில பொருட்­களை நன்­கொ­டை­யாக வழங்­கின.

இவ்வாறு சிங்கப்பூர் அரசாங்கம் முதல் தனியார் அமைப்புகள், தனி மனிதர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து உதவி வருவதாக நன்றியுடன் குறிப்பிட்டார் திரு குமரன்.

தொடக்­கத்­தில் இரு­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர்­களும் தற்­காப்பு அமைச்­சர்­களும் தொடர்­பு­கொண்டு பரஸ்பர உதவிகள் குறித்துப் பேசினர். சில வாரங்­க­ளுக்கு முன்­னர் நிகழ்ச்சியொன்றில் சந்தித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் பொருட்­கள் வாங்­கும் முயற்சிகள் குறித்து விசாரித்தார்.இவ்வாறு சிங்­கப்­பூர் அமைச்­சர்­கள் இந்­தி­யா­வின் தேவை­களைக் கேட்ட றிந்து உதவுவது பற்றிக் குறிப்பிட்ட திரு குமரன், சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்­தி­ய சமூக அமைப்­பு­களின் உதவி யையும் பட்டியலிட்டார்.

சிலர் முத­ல­மைச்­சர் நிவா­ரண நிதி­க்­கும் பிர­த­மர் குடி­மக்­கள் உதவி, அவ­ச­ர­கால நிவா­ரண நிதிக்­கும் நேர­டி­யாக அனுப்பி உள்­ள­னர் என்­ப­தை­யும் அவர் பகிர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து அனுப்­பப்­படும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களும் மருத்­துவ சாத­னங்­களும் இந்­திய செஞ்­சி­லுவைச் சங்­கத்­தால் பெறப்­படு­கின்­றன. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் கொவிட்-19 நிவா­ர­ணப் பொருட்­களை ஒரு­மு­கப்­ப­டுத்­தும் பொறுப்பை இச்சங்கம் ஏற்­றுள்­ளது. ‘எச்­எல்­எல் லைஃப்கேர்’ எனும் இந்­திய சுகா­தார அமைச்­சின்­கீழ் இயங்­கும் நிறு­வ­னம் அச்­சங்­கத்­தி­டம் அந்­தப் பொருட்­க­ளைப் பெற்று இந்­தியா முழு­தும் விநி­யோ­கிக்­கிறது. இல­வ­ச­மாக விநி­யோ­கிப்­ப­தற்கு அனுப்­பப்­படும் நிவா­ர­ணப் பொருட்­களை விநியோகிக்க இந்­திய அர­சாங்­கம் போக்­கு­வ­ரத்­துத் தேவை­க­ளை செய்­து­கொ­டுக்­கிறது.

அண்­மைய வாரங்­களில் சில அதி­ருப்தி தரும் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டி­ருந்­தா­லும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான நட்­பு­றவு வலு­வாகவே உள்ளதைச் சுட்டினார் திரு குமரன்.

சிங்­கப்­பூ­ரில் பர­வி­வ­ரும் பி1617 உரு­மா­றிய கொவிட்-19 கிருமி இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­துள்­ளது என்ற செய்தி வெளி­யா­னதை அடுத்து சிங்­கப்­பூ­ரில் இந்­திய சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எதி­ரான இன வா­தச் செயல்­கள் அதி­ருப்தி ஏற்படுத்­திய சம்­ப­வங்­களில் அடங்கும்.

டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் சிங்­கப்­பூ­ரில் புதிய வகைக் கிருமி பர­வி ­வ­ரு­வ­தா­க­வும் சிறு­வர்­களை அவை தாக்­கு­வ­தா­க­வும் அத­னால் அதன் பர­வலைத் தடுக்க சிங்­கப்­பூ­ரு­ட­னான விமா­னச் சேவை­களை நிறுத்­து­மா­றும் பதிவு செய்த சமூக ஊட­கக் கருத்­தும் இரு­நாட்டு உற­வு­க­ளின் வலி­மை­யைச் சோதித்­தன.

சென்ற ஆண்டு கொவிட்-19 சிங்­கப்­பூ­ரைப் பெரி­தும் பாதித்த தரு­ணத்­தில் இந்­தியா அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது.

பல நாடு­கள் நோய்ப் பர­வ­லால் எல்­லை­களை மூடி­ய­து­டன் ஏற்­று­மதி­யை­யும் முடக்­கிய நிலை­யில் இந்­தியா தொடர்ந்து உண­வுப் பொருட்­கள் உட்­பட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு ஏற்­று­மதி செய்­த­து.

இந்த இக்­கட்­டான காலகட்­டத்­தி­லும் இரு­நாட்டு வர்த்­த­கம் சீரா­க­வும் வலு­வா­க­வும் உள்­ளது.

இந்­தி­யா­வின் முத­லீட்­டா­ளர்­களில் சிங்­கப்­பூர் தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்ளது.

இந்­தப் பொரு­ளி­யல் ஆண்­டில் இரு­நாட்டு வர்த்­த­கம் 19 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர். 2019 ஏப்­ரல் முதல் 2020 மார்ச் வரை­யி­லான காலத்தில் இது 23 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக இருந்­தது.

“மிக­வும் நெருக்­க­டி­யான கால­கட்­டத்­தி­லும் வலுப்பெற்று வரும் இந்த சிறப்பான வர்த்தக உறவு, இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று தேவை என்­ப­தை­யும் இரு நாடுகளும் ஒன்­றுக்­கொன்று ஆதரவு வழங்கு­வ­தைத் தொட­ர­வேண்­டும் என்­ப­தை­யும் பிர­தி­ப­லிக்­கிறது,” என்று குறிப்பிட்டார் திரு குமரன்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான நட்புறவு வர்த்தக, அரசதந்திர உறவுகளுக்கும் அப்பாற்பட்டு மனிதநேய உறவுகளாலும் பின்னிப்பிணைந்துள்ளது.

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் நோய்ப் பரவல் தலைதூக்கியபோது

இந்தியா உதவியது. இப்போது தனக்கு உதவி தேவையென்று இந்தியா குரல் கொடுத்த உடனேயே முதலுதவிகளில் இறங்கியது சிங்கப்பூர்.

இந்தச் சூழலில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன் இரு நாட்டு உறவுகள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!