காமாகோரி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ‘ஐஎல்சிஏ 6’ பிரிவில் சிங்கப்பூரின் ஜானியா ஆங்கும் சிறுவர்களுக்கான ‘29எர்’ (29er) பிரிவில் சிங்கப்பூரின் ஷான் கும் - நைஜல் டான் இணையினரும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இம்மூவருமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கியவர்கள்.
15 வயது ஷானும் 16 வயது நைஜலும் 35 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். முதலிடத்தில் வந்த ஹாங்காங்கின் ஈதன் கியூ - லூயிஸ் போல்சன் இணையைவிட அவர்கள் 24 புள்ளிகள் குறைவாகப் பெற்றிருந்தனர். காமாகோரியில் உள்ள கையோ படகுத் துறையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) போட்டி நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறுவர்களுக்கான ‘29எர்’ பிரிவில் சிங்கப்பூர் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை. மகளிர் பிரிவில் இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சகோதரிகள் பிரிசில்லா லோவும் செசீலியா லோவும் சிறுமிகளுக்கான ‘29எர்’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர்.
இதற்கிடையே, 22 வயது ஆங் 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். தாய்லாந்தின் சோஃபியா மோன்ட்கோமரி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
