எஃப் 1 கார் பந்தயத்தில் தீபாவளி தலைக்கவசம்

எஃப் 1 கார் பந்தயத்தில் தீபாவளி தலைக்கவசம்

1 of 3
படம்: இன்ஸ்ட்கிராம்/ அர்விந்த் லிண்ட்பிளாட்
படம்: இன்ஸ்ட்கிராம்/ அர்விந்த் லிண்ட்பிளாட்
படம்: இன்ஸ்ட்கிராம்/ அர்விந்த் லிண்ட்பிளாட்

04 Nov 2026 - 7:12 pm

1 mins read

லண்டன்: இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதேபோல், நவம்பர் 8ஆம் தேதி பிரேசிலில் ஃபார்முலா 1 கார் பந்தயமும் நடைபெறுகிறது.

தீபாவளியின்போது பந்தயம் நடப்பதால் ரேஸிங் புல்ஸ் அணியின் அர்விந்த் லிண்ட்பிளாட் இந்தியப் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் சிறப்புத் தலைக்கவசம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தலைக்கவசத்தில் தீபாவளியின் கருப்பொருள் அடங்கியுள்ளது.

அர்விந்த், பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாடுகளின் குடிமகன். அவரது தாயார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதனால் அர்விந்த் இந்திய பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

“எனது குடும்பத்தினருடன், குறிப்பாக எனது தாத்தா, பாட்டியுடன் தீபாவளியைக் கொண்டாடுவது நான் வளர்ந்த விதத்தில் ஒரு முக்கியப் பகுதியாகும்,” என்று அர்விந்த் கூறினார்.

“இந்தச் சிறப்புத் தலைக்கவசத்தை உருவாக்குவது ஓர் அர்த்தமுள்ள தருணம். இது எனது இந்தியப் பாரம்பரியத்தையும் குடும்ப வேர்களையும் சிறப்பிக்கிறது. ரங்கோலி, தாமரை மலர், அகல் விளக்குகள், பட்டாசுகள் போன்ற கருப்பொருள்களை இந்த வடிவமைப்பு ஒன்றிணைக்கிறது,” என்றார் அவர்.

“பிரேசிலில் நடைபெறும் பந்தயத்தில் தீபாவளி தலைக்கவசத்தை அணிந்துகொண்டு காரில் ஏற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று அர்விந்த் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்