தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் களமிறங்குகிறார் மெஸ்ஸி

1 mins read
55692ac4-931a-4523-a26c-eddf228c2172
அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி. - படம்: ஏஎஃப்பி

அர்ஜென்டினாவின் காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியின் அபாரத் திறன்களை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பு சிங்கப்பூர் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அர்ஜென்டினா காற்பந்துக் குழு சிங்கப்பூரில் நட்புமுறை ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அர்ஜென்டினா காற்பந்துக் குழு இந்தியாவில் நட்புமுறை ஆட்டத்தில் விளையாட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலை எச்எஸ்பிசி வங்கியும் அர்ஜென்டினா காற்பந்துச் சங்கமும் புதன்கிழமை (மார்ச் 26) இணைந்து வெளியிட்டன.

அர்ஜென்டினாவுக்கும் எச்எஸ்பிசி வங்கிக்கும் இடையிலான ஓராண்டு பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்டங்கள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

ஆட்டத்தைக் காணவும் அதுதொடர்பாகவும் தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்காளிகளுக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று எச்எஸ்பிசி வங்கி கூறியது.

நுழைவுச்சீட்டுகள், காற்பந்து நட்சத்திரங்களுடனான சந்திப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

அர்ஜென்டினா காற்பந்துக் குழு சிங்கப்பூரில் ஆகக் கடைசியாக 2017ஆம் ஆண்டில் களமிறங்கியது.

அந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் குழுவை அர்ஜென்டினா 6-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த நட்புமுறை ஆட்டத்தில் மெஸ்ஸி களமிறங்குவதாக இருந்தது.

ஆனால் தமது திருமணத்தை முன்னிட்டு அவர் குழுவில் இடம்பெறவில்லை. இது சிங்கப்பூர் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

$40 முதல் $188 பெறுமானமுள்ள நுழைவுச்சீட்டுகளை அவர்கள் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்