யுனைடெட் நிர்வாகியாகிறார் பொக்கட்டினோ

யுனைடெட் நிர்வாகியாகிறார் பொக்கட்டினோ

படம்: ஏஎஃப்பி

14 Nov 2026 - 3:44 pm

1 mins read

மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், அதன் அடுத்த நிர்வாகியாக மொரிச்சியோ பொக்கட்டினோவை அறிவித்துள்ளது.

மைக்கல் கேரிக் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு பொக்கட்டினோ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பு வகித்துவந்த பொக்கட்டினோ வரும் புதன்கிழமை (நவம்பர் 18) முதல் தங்கள் குழுவின் நிர்வாகியாக இருப்பார் என்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) அறிக்கை மூலம் தெரிவித்தது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பொக்கட்டினோ, முன்பு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுக்களான டோட்டன்ஹம் ஹாட்ஸப்ர், செல்சி ஆகியவற்றின் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தவர்.

“மொரிச்சியோவும் அவருடன் பணியாற்றுபவர்களும் அமெரிக்க ஆண்கள் தேசிய அணியுடனான பொறுப்புகளை நிறைவேற்றி முடித்தவுடன் விடுவிக்கப்பட எங்கள் குழு, அமெரிக்கக் காற்பந்துச் சம்மேளனத்துன் ஒப்பந்தம் எட்டியுள்ளது,” என்று யுனைடெட் விவரித்தது.

பிரிமியர் லீக் பட்டியலில் யுனைடெட் தற்போது கடைசி மூன்று இடங்களுக்குள் இருக்கிறது. பருவத்தின் இறுதியில் அந்த இடங்களில் முடிக்கும் குழுக்கள் பிரிமியர் லீக்குக்கு அடுத்த நிலையில் இருக்கும் சேம்பியன்‌ஷிப் பட்டியலுக்குத் தள்ளப்படும்.

இந்த லீக் பருவத்தின் முதல் 10 ஆட்டங்களில் யுனைடெட் ஓராட்டத்தில் மட்டும்தான் வெற்றிபெற்றுள்ளது.

அலெக்ஸ் ஃபர்கசன் நிர்வாகியாக இருந்த காலத்தில் யுனைடெட் கிண்ணங்களை வென்று குவித்தது. அந்த குழுவில் நட்சத்திரமாக விளங்கிய கேரிக், 2013ஆம் ஆண்டு ஃபர்கசன் ஓய்வுபெற்ற பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏழாவது யுனைடெட் நிர்வாகியாகும்.

ஃபர்கசன், 27 ஆண்டுகள் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார்.

குறிப்புச் சொற்கள்