தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய விளையாட்டுகள்: சிங்கப்பூருக்கு முதல் தங்கம்

2 mins read
a51464ff-b331-4274-b020-b784e04666e6
சிங்கப்பூரின் தங்கமகன்கள் மேக்சிமிலியன் மாய்டர் (இடது), ரயன் லொ. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஹாங்ஜோ: இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆண்கள் ‘கைட்ஃபோய்லிங்’ எனப்படும் நீரில் சறுக்கியபடி பட்டம் விடும் போட்டியில் சிங்கப்பூரின் மேக்சிமிலியன் மாய்டர் தங்கம் வென்றார்.

போட்டி நிங்போ சியாங்ஷான் படகோட்ட நிலையத்தில் நடைபெற்றது. உலகப் போட்டிகளின் நடப்பு வெற்றியாளரான 17 வயது மேக்சிமிலியன், முதன்முறையாக ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடுகிறார்.

தான் பங்கேற்ற 16 பந்தயங்களிலும் மேக்சிமிலியன் வெற்றிகண்டார். அதனால் பதக்க வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் பந்தயங்களில் அவர் ஒன்றை மட்டுமே வெல்லவேண்டியிருந்தது.

மாய்டரின் குழுவில் இருக்கும் மற்றொரு சிங்கப்பூரரான படகோட்டி ரயன் லொ, விளையாட்டுகளில் சிங்கப்பூரின் இரண்டாவது தங்கத்தையும் கைப்பற்றினார். ஐசிஎல்ஏ7 பிரிவில் 26 வயது லோ தங்கம் வென்றார்.

லோவின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில் இப்போட்டியில் சிங்கப்பூருக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஐசிஎல்ஏ பிரிவில் சிங்கப்பூரின் விக்டோரியா சான் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளில் திங்கட்கிழமையன்று சிங்கப்பூர் அதன் முதல் பதக்கத்தை வென்றது. வூஷு போட்டியில் சிங்கப்பூரின் கிம்பர்லி ஓங் அன்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதற்கிடையே, ஆண்கள் வூஷு போட்டியில் சிங்கப்பூரின் ஜோவன் லிம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

டாவ்ஷு, குன்ஷு உள்ளடக்கிய பிரிவில் 19.476 புள்ளிகளைப் பெற்று லிம் வெள்ளியைக் கைப்பற்றினார்.

ஆசிய விளையாட்டுகளில் இந்த வூஷு பிரிவில் இதுவே சிங்கப்பூர் வென்றிக்கும் முதல் பதக்கம். இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளில் இது சிங்கப்பூர் பெற்றுள்ள இரண்டாவது வூஷூ பதக்கம்.

2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் 0.01 புள்ளி வித்தியாசத்தில் லிம் பதக்கம் வெல்லத் தவறினார்.

தங்கப் பதக்கம் வென்றது சீனா. வெண்கலம், இந்தோனீசியாவுக்குச் சென்றது.

குறிப்புச் சொற்கள்