தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் குத்துச்சண்டை வீரர் தோல்வி

1 mins read
f80424b3-c761-4a49-9653-200f3f5a054b
சிங்கப்பூர் குத்துச்சண்டை வீராங்கனை தனிஷா மதியழகன். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் குத்துச்சண்டைப் பிரிவுகளில் போட்டியிட்ட ஒரே சிங்கப்பூரர் தோல்வியடைந்துள்ளார். சிங்கப்பூர் குத்துச்சண்டை வீராங்கனையான தனிஷா மதியழகன், பெண்கள் 50 கிலோகிராம் எடைப் பிரிவில் தோல்வியடைந்தார்.

ரவுண்ட் ஆஃப் 16 பிரிவில் 26 வயது தனிஷா, உஸ்பெக்கிஸ்தானின் சபினா பொபொகுலோவாவிடம் 5-0 எனும் புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

தனிஷா, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர்.

குறிப்புச் சொற்கள்