தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய விளையாட்டுகள்: நீச்சலில் சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்

1 mins read
791ee051-5e40-4f4b-9654-03e33f94d6c9
வெள்ளிப் பதக்கம் வென்றார் தியோங் சென் வெய். - படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் அதன் முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் தியோங் சென் வெய் வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 வயது தியோங் எடுத்துக்கொண்ட நேரம் 23.34 விநாடிகள்.

போட்டியில் தென்கொரியாவின் பாய்க் இன்-சுல் ஆசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.29 விநாடிகள்.

வெண்கலப் பதக்கத்தை வென்றார் கஸகஸ்தானின் அடில்பெக் முசின். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.44 விநாடிகள்.

தியோங், இவ்வாண்டு பல சவால்களை எதிர்நோக்கி வந்துள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் முழங்கையில் மோசமான காயம் ஏற்பட்டது.

மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப போராடி வந்த தியோங்கிற்கு வெகுமதியாக அமைந்துள்ளது இந்த வெற்றி.

குறிப்புச் சொற்கள்