சீனாவில் ஏழை விவசாயி மகனுக்குத் தங்கம்

சீனாவில் ஏழை விவசாயி மகனுக்குத் தங்கம்

1 mins read
8103c5a8-2403-4357-9dfc-b83c9c9e1b36
67 கிலோகிராம் எடைகொண்ட ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்ற பிறகு கொண்டாடும் சீனாவின் சென் லிஜுன். - படம்: ஏஎஃப்பி

ஹாங்ஜோ: வசதி குறைந்த ஏழை விவசாயிகளின் மகனான சீனாவின் எடை தூக்கும் வீரர் சென் லிஜுன் முதன்முறையாக ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற 67 கிலோகிராம் எடைகொண்ட ஆண்களுக்கான பிரிவில் அவர் வாகை சூடினார்.

150 கிலோகிராம் ‘ஸ்னேட்ச்’ போட்டியையும் 180 கிலோகிராம் ‘கிளீன் அண்ட் ஜர்க்’ போட்டியையும் சென் வெற்றிகரமாக முடித்தார். பல சவால்களை எதிர்கொண்டு அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

வடகொரியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது; வெண்கலம் தென்கொரியாவுக்குச் சென்றது.

“சீனாவின் தேசிய தினத்தன்று வெற்றிகண்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எனது பருவத்திற்கு இதுவே ஆகச் சிறந்த முடிவு,” என்றார் 30 வயது சென். சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு இவர் உலகப் போட்டியில் வென்றார்.

சென் தங்கம் வென்றதை எண்ணி சீனாவின் தேசிய எடை தூக்கும் பயிற்றுவிப்பாளர் யு ஜியே பெருமையாகப் பேசினார்.

“30 வயதான ஒரு வீரர் அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்று வெற்றிகாண்பது சாதாரணமன்று. ஆனால், அவர் அதற்கேற்றவாறு தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்,” என்றார் யு ஜியே.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுஆசிய விளையாட்டுஆசிய விளையாட்டுப் போட்டிகள்சீனா