தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்திடம் வீழ்ந்த சிங்கப்பூர்

1 mins read
51a2f761-4ca3-4468-aed3-1302a939e15e
சிங்கப்பூரின் இரண்டாவது கோலைப் போட்ட ஃபாரிஸ் ராம்லி (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தாய்லாந்திடம் சிங்கப்பூர் 4-2 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டம் டிசம்பர் 17ஆம் தேதியன்று தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் தாய்லாந்தின் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து சிங்கப்பூர் ஆட்டக்காரர் ஷவால் அனுப்பிய பந்து தாய்லாந்து கோல் காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.

இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் ஃபாரிஸ் ராம்லி சிங்கப்பூரின் இரண்டாவது கோலைப் போட்டார்.

ஏறத்தாழ 20 மீட்டர் தூரத்திலிருந்து அவர் அனுப்பிய பந்து அழகாக வளைந்து சென்று வலைக்குள் புகுந்தது.

ஆனால் இடைவேளைக்குச் சில வினாடிகளே எஞ்சியிருந்த நிலையில் தாய்லாந்து கோல் போட்டது.

இடைவேளையின்போது 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டத்தில் விட்டுக்கொடுக்காமல் போராடிய தாய்லந்து மேலும் மூன்று கோல்கள் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது.

அரையிறுதி ஆட்டத்துக்குத் தாய்லாந்து தகுதி பெற்றுவிட்டது.

அரையிறுதி வாய்ப்பைப் பெற இனி சிங்கப்பூரும் மலேசியாவும் மோத இருக்கின்றன.

சிங்கப்பூர், மலேசியா மட்டுமின்றி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கம்போடியாவுக்கும் உள்ளது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஆட்டம் டிசம்பர் 20ஆம் தேதியன்று மலேசியாவின் புக்கிட் ஜலில் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

அதே நாளன்று கம்போடியாவும் தாய்லாந்தும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்