தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனவு இல்லத் திட்டத்தின்மூலம் 100,000 கான்கிரீட் வீடுகள்

1 mins read
1bb5579c-0d7e-4baa-b5d8-04a7df9bf8ca
குடிசையில்லாத் தமிழகம் அமைந்திட வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு என்றார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கனவு இல்லத் திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடி மதிப்பில் இந்தப் பணி தொடங்கப்படும் என்றும் குடிசையில்லாத் தமிழகம் அமைந்திட வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அரசு மானியத் திட்டத்தில் கட்டப்பட்டு, பழுதடைந்த 25,000 வீடுகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டித்தரப்படும் என்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

“முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள், 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். தொடர் பராமரிப்புக்கு 120 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்.

“கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2,329 கிராம ஊராட்சிகளில், ரூ.1,087 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் தங்கம் தென்னரசு.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 3,796 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்