சென்னையில் 19,600 பேர் அஞ்சல் வாக்கு செலுத்தவில்லை

சென்னையில் 19,600 பேர் அஞ்சல் வாக்கு செலுத்தவில்லை

1 mins read
e73d558a-996b-4673-b409-05c46d474474
அரசு ஊழியர்களும் காவல்துறையினரும் அஞ்சல் வாக்குகளைச் செலுத்த ஆர்வம் காட்டாதது பேசுபொருளாகி உள்ளது. - சித்திரிப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் அஞ்சல் வழி வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 19,600 பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விகிதம் சாதனை அளவாக அதிகரித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களும் காவல்துறையினரும் அஞ்சல் வாக்குகளைச் செலுத்த ஆர்வம் காட்டாதது பேசுபொருளாகி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 2,893,505 வாக்காளர்களில் ஏறக்குறைய 74,000 பேர் 18 வயதைக் கடந்த புதிய வாக்காளர்கள்.

வாக்குப்பதிவின்போது 83.71% வாக்குகள் பதிவாயின. கடந்த முறை 59.24% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், தற்போது கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஆக அதிகமாக, ஆர்கே நகர் தொகுதியில் 90.53% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால், வாக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவானாலும், அரசு ஊழியர்களும் காவல்துறையினரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் மட்டும் 52,047 பேருக்கு அஞ்சல் வாக்குகள் உள்ளன. ஆனால், 32,447 பேர் மட்டுமே வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 19,600 பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்