சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 254 தமிழறிஞர்களுக்கு ரூ.4.70 கோடியில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘செம்மொழி நாள்’ விழாவில் பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாடுவதோடு, தமிழ் வளர்ச்சி இயக்ககம் வாயிலாக 29 பிரிவுகளில், 79 அறிஞர்களுக்கு சிறப்பாக செயல்பட்ட தமிழ் அமைப்புக்கும் சேர்த்து 80 விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“கருணாநிதி நினைவிடத்தை இதுவரை 45 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். கருணாநிதி உலக அருங்காட்சியகத்தை 5 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
“அண்மையில், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருக்குறள் வார விழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம்,” என்றார் அமைச்சர் சாமிநாதன்.

