தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தயிர் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் தீவிரம்

1 mins read
79fa03d6-1f9b-471a-a689-c1a64f6c8a60
ஆவின் தயிர். - படம்: ஊடகம்

சென்னை: அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியபோது, “சென்னையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.

“இவற்றின் விற்பனையை மேம்படுத்த, சென்னையில் உள்ள அனைத்து ஆவின் விற்பனைக் கூடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த தயிரில் புரதம் அதிகமாக இருக்கும். குழந்தைகள், வயதானவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். 120 கிராம் (ரூ.10), 250 கிராம் (ரூ.20), 450 கிராம் (ரூ.35) என்ற அளவில் கிடைக்கிறது.

குறிப்புச் சொற்கள்