தமிழகம் முழுவதும் 3,000 ஆயிரம் சட்ட ஆலோசகர்களை நியமிக்க தனுஷ் திட்டம்

தமிழகம் முழுவதும் 3,000 ஆயிரம் சட்ட ஆலோசகர்களை நியமிக்க தனுஷ் திட்டம்

கோப்புப்படம்: தமிழ் ஒன் இந்தியா

01 Nov 2026 - 1:30 pm

1 mins read

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தமது ரசிகர் மன்றக் கட்டமைப்பைத் தமிழகம் முழுவதும் வலுப்படுத்திவரும் சூழலில், மாநிலம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரது ரசிகர் மன்றங்கள் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்ற பெயரில் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம், தொகுதிவாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம், தீவிர உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிரணிக் கூட்டத்தில் திரளான பெண் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு இலவசப் பயிற்சி மையங்களைத் தொடங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இயக்கத்தின் கட்டமைப்பை மேலும் சட்டபூர்வமாக வலுப்படுத்த மாநிலம் தழுவிய அளவில் ஏறக்குறைய 3,000 வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களைச் சட்ட ஆலோசகர்களாக நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் தேவையான சட்ட உதவிகள், ஆலோசனைகளை தங்குதடையின்றி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் அதிமுக அல்லது பாஜக ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கட்சியைத் தேர்வுசெய்து கூட்டணி அமைப்பார் என்றும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும், தனுஷுக்கு அவரது முன்னாள் மாமனாரும் நடிகருமான ரஜினியின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்