சட்டமன்றத் தேர்தல் ஊழலுக்கும் மக்களுக்கும் இடையிலான போர்: விஜய்

சட்டமன்றத் தேர்தல் ஊழலுக்கும் மக்களுக்கும் இடையிலான போர்: விஜய்

2 mins read
656477a6-2bc4-4f53-aab5-9d584d79a411
வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய். - படம்: மின்னம்பலம்
multi-img1 of 2

வேலூர்: வேலூ;u மாவட்டம், அகரம்சேரியில் திங்கட்கிழமை தவெக தலைவர் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. முன்னதாக அரங்கிற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் 4,900 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர்.குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டம் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது

கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சித் தலைவர் விஜய், திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“தமிழக மக்களின் துயர்துடைக்க வெகுஜன சக்தியாக வளர்ந்துள்ள தவெக என விஜய் அப்போது கூறினார்.

“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வெறும் வாக்குப்பதிவு அல்ல, அது ஊழலுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான போர் என்று குறிப்பிட்டார். தூய சக்தி தவெக, தீய சக்தி திமுகவுக்கு இடையே நடக்கும் போர். இந்தத் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி. தேசிய ஜனநாயகக் கூட்டணி களத்திலே இல்லை,” என்று கூறியுள்ளார்.

“திமுக ஆட்சியில் சூப்பர்ஸ்டார் மாநிலம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சியில் அப்படி இருந்தது. இப்போது ஸ்டேண்டர்டு காமெடி நடக்கும் மாநிலமாக உள்ளது.

மேலும், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அரசியல் அதிசயத்தைப் போல இந்தத் தேர்தல் அமையப்போவதாகவும், ஊழலை எதிர்ப்பதால் ஒட்டுமொத்த பழைய அரசியல் சக்திகளும் தன்னை எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம், ஒழுங்கு காணாமல் போய் பல காலமாகி விட்டது. நாமும் கேள்வியாகக் கேட்கிறோம். ஆனால், பதில் வருவதே இல்லை. இந்த தீய சக்தியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு. தேர்தலில் விசில் சின்னம் அருகே உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான்.

“நமது ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நன்றாக இருக்கும். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும். கல்வியின் தரம் நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளைச் சந்திக்கும் வகையில் தரம் உயர்த்தப்படும். மாநில மற்றும் மத்திய அரசை அணுகும் முறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.

பாஜகவை விமர்சிக்காதது ஏன்?

சிபிஐ விசாரணைக்குச் சென்று வந்த பின் அதிமுக, திமுகவை விமர்சிக்கும் விஜய் பாஜகவை மட்டும் விமர்சிக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்