‘பிரேக்’ செயலிழப்பு: பயணிகளைக் காப்பாற்றிய விமானி

‘பிரேக்’ செயலிழப்பு: பயணிகளைக் காப்பாற்றிய விமானி

1 mins read
00e5ec33-3c35-4732-9b38-3d1e087c7583
விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்கியபோது, அதன் ‘பிரேக்’ அமைப்பு செயலிழந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமானியின் சாதுரியமான செயலால் அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

திங்கட்கிழமை அதிகாலை 326 பேருடன் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சென்னை வந்தது அந்த விமானம். இவர்களில், 12 பேர் விமான ஊழியர்களாவர்.

விமானம் தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான், அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

விமானத்தின் ‘பிரேக்’ செயல்படவில்லை என சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவசரகால நடைமுறையின்படி விமானம் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் வேகமாகச் செய்யப்பட்டன.

விமான ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுக்கள், மீட்புக் குழுக்கள் தயார்நிலையில் இருந்தன.

இதற்கிடையே, பயணிகள் என்ன நடக்கிறது என்பதை ஓரளவு உணர்ந்த நிலையில், பதற்றம் அடைந்ததாகவும் சில நிமிடங்களில் விமானி அந்த விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கியதாகவும் டிடி நெக்ஸ்ட் உள்ளிட்ட தகவல் ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்