மூன்றாவது முறையாக மோதும் அண்ணன்- தம்பி

மூன்றாவது முறையாக மோதும் அண்ணன்- தம்பி

1 mins read
1026ce91-021b-4aca-9564-8a2d6b54cf14
சகோதரர்ஜள் மகாராஜன், லோகிராஜன். - படங்கள்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

மதுரை: ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்றாவது முறையாக சகோதரர்கள் இருவர் தேர்தல் களத்தில் மோத உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நட்சத்திரத் தொகுதிகளில் ஆண்டிப்பட்டியும் ஒன்று. காலஞ்சென்ற முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் போட்டியிட்டு வென்ற தொகுதி இது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக மகாராஜனும் அதிமுக சார்பாக அவரது இளைய சகோதரர் லோகிராஜனும் போட்டியிட்டனர். இதில் மகாராஜன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மகாராஜனுக்கு வெற்றி கிடைத்தது. எனினும், அதிமுக தலைமையிடம் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, மூன்றாவது முறையாக ஆண்டிப்பட்டி தொகுதியில் லோகிராஜன் களமிறங்குகிறார்.

இதேபோல், நடப்பு எம்எல்ஏவான மகாராஜனுக்கும் திமுக தலைமை மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இதையடுத்து, மூன்றாவது முறையாக அரசியல் களத்தில் சகோதரர்கள் மோத உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்