தமிழகக் கல்வி கொள்கையை நாளை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 mins read
6d60094e-0b22-4335-b903-b5a40cedc48b
கல்வியாளர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், 3,5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்திற்கான கல்வி கொள்கையை அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (08 ஆகஸ்ட்) வெளியிடுகிறார்.

அதில் இருமொழி கொள்கை, நீட் தேர்வு கூடாது, போடித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிலையங்கள் விளம்பரம் செய்யத் தடை, பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் போன்றவை வலியுறுத்தப்படும் எனக் கூறப்பட்டது.

முன்னதாக,கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்திற்கென கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது.

ஈராண்டுகளாக ஆய்வு மேற்கொண்ட அக்குழு சுமார் 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்மாநில முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், 3,5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த கல்விக்கொள்கை குறித்து முதல்வரும் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், தமிழகக் கல்வி கொள்கையை மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்