விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை

விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை

1 mins read
10b308d0-2908-49b6-8fcf-2bb7f9406b08
தமிழக முதல்வராக விஜய் மே 7ஆம் தேதி பதவியேற்க இருப்பததாக கருதப்பட்ட நேரு உள் விளையாட்டு அரங்கத்தை அதிகாரிகள். ஆய்வு செய்தனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் விஜய்யை தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், காவல்துறைத் தலைமை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை (மே 6) நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள விஜய்யின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அப்போது பல ஐஏஎஸ் அதிகாரிகள் திரு விஜய்க்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் 17வது அமைச்சரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திரு விஜய்யுடனான சந்திப்பின்போது ஆட்சி மாற்​றத்​துக்​கான முன்​னேற்​பாடு​கள், புதிய அரசு பதவி​யேற்பு விழாவுக்​கான பாது​காப்பு நெறி​முறை​கள், நிர்​வாகக் கட்​டமைப்பு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டதாகத் தெரிகிறது.

புதிய அரசு பொறுப்​பேற்​ப​தற்கு முன்​பாக மேற்​கொள்ள வேண்​டிய சட்​டபூர்வ மற்​றும் நிர்​வாகச் செயல்​பாடு​கள் குறித்து தலை​மைச் செயலாளர் சாய் குமார் விளக்​கம் அளித்​தார்.

மேலும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை தொடர்ந்து சிக்கலின்றி வழங்குவது குறித்தும் அதிகாரிகள் சிலர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. மேலும்

, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வது, மற்ற மக்​கள் நலத் திட்​திட்டங்களைத் தடை​யின்​றித் தொடர்​வது குறித்​தும் விஜய்யுடன் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் ர்​கள் விரி​வான ஆலோசனை நடத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்