சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் விஜய்யை தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், காவல்துறைத் தலைமை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை (மே 6) நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள விஜய்யின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அப்போது பல ஐஏஎஸ் அதிகாரிகள் திரு விஜய்க்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் 17வது அமைச்சரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திரு விஜய்யுடனான சந்திப்பின்போது ஆட்சி மாற்றத்துக்கான முன்னேற்பாடுகள், புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள், நிர்வாகக் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வ மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சாய் குமார் விளக்கம் அளித்தார்.
மேலும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை தொடர்ந்து சிக்கலின்றி வழங்குவது குறித்தும் அதிகாரிகள் சிலர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. மேலும்
, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவது, மற்ற மக்கள் நலத் திட்திட்டங்களைத் தடையின்றித் தொடர்வது குறித்தும் விஜய்யுடன் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் ர்கள் விரிவான ஆலோசனை நடத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

