திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய கம்யூனிஸ்ட்

திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய கம்யூனிஸ்ட்

1 mins read
b95b225f-722f-436d-8145-3fd9bb84faf9
வீரபாண்டியன். - கோப்புப் படம்: தி நியூஸ் மினட்

கோவை: திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகியுள்ளது.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இத்தகவலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உறுதிசெய்தார்.

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற தீவிர ஆலோசனைக்குப் பிறகு கூட்டணியில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

திமுகவின் நீண்டகாலத் தோழமைக் கட்சி என்றபோதிலும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் முடிவை எடுத்தது.

அப்போதே திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தற்போது திரு வீரபாண்டியன் உறுதிசெய்துள்ளார்.

தற்போது நிலவும் சூழலில் திமுக கூட்டணியில் இடம்பெற இயலாது என்றும் அக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இனி நிச்சயமாக இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சி மூன்று மாதங்கள்கூட நீடிக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியிருக்கக் கூடாது என்றார்.

குறிப்புச் சொற்கள்