சென்னை: நடப்பு திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்குத் துளியும் பயமில்லாமல் போய்விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தொடர் குற்றங்கள் நடக்கும் நிலையில், அவற்றைத் தடுக்க தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் இருக்கிறதா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டைக் குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
“திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாயத் தம்பதி, மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
“இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது பொறுப்பாகச் செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என ஓர் அறிக்கையில் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.